புரோ லீக் கபடிப்போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறிய முக்கிய அணிகள்.! - Seithipunal
Seithipunal


12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் முதல் 6 இடங்களை பிடித்த பாட்னா பைரேட்ஸ், உ.பி யோதா, குஜராத் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதில் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவில் உபி யோதா, பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாட்னா பைரட்சும், உ.பி யோதாவும் மோதின இதில் பாட்னா அணி 38-27 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தபாங் டெல்லி அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. இதில் டெல்லி அணி 40-35 என்ற புள்ளி கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patna pirates and dhabang delhi qualified final


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->