பாரா ஒலிம்பிக் இந்திய மக்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்துள்ளது!...பாரா ஒலிம்பிக்கின் இந்திய குழுவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
Para olympics has made indian people happy pm modi praises the indian team of para olympics
கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாராலிம்பிக் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக இந்த விழாவில் வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டதில், ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தேசியக் கொடி ஏந்தி தங்களது நன்றியை தெரிவித்தனர். அதன்படி, இந்தியாவின் வில்வித்தை வீரர் ஹவிந்தர் மற்றும் தடகள வீராங்கனை ப்ரீத்தி ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்தி மைதானத்திற்கு வந்தனர். அதேபோல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இவ்விழாவில், ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 29 பதக்கங்களை வென்று 18-வது இடம் பிடித்துள்ள இந்திய குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மிகவும் வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்திருந்ததாகவும், நமது சிறந்த பாரா விளையாட்டு வீரர்கள் 29 பதக்கங்களை வென்றுள்ளது, இந்திய மக்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Para olympics has made indian people happy pm modi praises the indian team of para olympics