11 மோட்டார் சைக்கிள்களை தாண்டும் இளைஞர்.! ஒலிம்பிக் வீரரே வியந்து பார்த்த வீடியோ.! - Seithipunal
Seithipunal


உலகத்தில் இளைஞர்களுக்கு உள்ள திறமையை சரியான முறையில் அடையாளம் கண்டு பயன்படுத்தி கொள்வது தான் வெற்றியின் ரகசியம்.

பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த இளைஞர் ஆஷிப் மகசி என்பவர் தனது உறவினரின் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவர் பகலில் குளங்களில் மீன் பிடிப்பது, டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவது தான் இவரின் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இதற்கிடையே சமீபத்தில் ஆஷிப் நீளம் தாண்டுதல் போன்ற ஒரு வீடியோவை கான் என்பவர் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரலான அந்த வீடியோவில் 11 பைக்குகளை ஒருங்கே நிறுத்திவைத்து அவற்றை அப்படியே தாண்டி செல்வது அனைவரையும் வீடியோ பார்க்கும் அனைவரையும் வியக்க வைத்தது. இந்த வீடியோவை இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர் அப்படி அந்த வீடியோவை பார்த்த அமெரிக்க தடகள ஜாம்பவான்களில் ஒருவரான ஒலிம்பிக் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் இதுவரையில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற கார்ல் லூயிஸ், ஆஷிப் மகசி நீளம் தாண்டும் திறமையை கண்டு வியந்து போனார்.

21 வயதே நிரம்பிய அந்த இளைஞரை ஊக்குவிப்பதற்காக அந்த  வீடியோவில் கமெண்டும் செய்தார் கார்ல் லூயிஸ் தன் கமெண்டில் 'எந்த பயமும் இல்லை இலக்கை மட்டுமே அடையும் உறுதியான மனநிலை தென்படுகிறது' என கூறியிருந்தார். உலகமே ஒரு காலத்தில் கொண்டாடிய தடகள வீரர் மெஷின் வீடியோ கமெண்ட் செய்ததும் பாகிஸ்தான் முழுக்க பிரபலம் அடைந்தார் ஆனால் அவருக்கு ஒலிம்பிக் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் இதுவரையில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற கார்ல் லூயிஸ் என்றால் யார் என்றே தெரியாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakistan young boy bike long jump


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->