கைகுலுக்க மறுக்கும் விவகாரம்: இந்தியாவுக்கு சமமா பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும்..தலைவர் நக்வி பேட்டி
Pakistan will retaliate equally to India over refusal to shake hands Leader Naqvi interview
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பை போன்ற சர்வதேச தொடர்களில் மட்டும் இரு அணிகளும் பொதுவான இடங்களில் மோதிவருகின்றன.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு ராணுவ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக, 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் கைகுலுக்காமல் விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் தலைவர் மோசின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதன் பின்னணியில், சமீபத்தில் நடைபெற்ற 2025 அண்டர்-19 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி பாகிஸ்தானுடன் கைகுலுக்கவில்லை.
அந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் பவுலர் அலி ராசா இந்திய வீரர்களை சீண்டும் வகையில் நடந்து கொண்டது சர்ச்சையை அதிகரித்தது. இதற்கு இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் வீரர் வைபவ் சூரியவன்ஷி கடுமையாக பதிலடி கொடுத்தனர்.
இதை இந்திய அணியின் நடத்தையின்மை என பாகிஸ்தான் பயிற்சியாளர் சர்பராஸ் கான் விமர்சித்தார். இந்த சூழலில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, இந்திய அணிக்கு சமமாகவே பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கைகுலுக்க விரும்பவில்லை என்றால், பாகிஸ்தானுக்கும் அதில் எந்த ஆசையும் இல்லை என்றும், எந்த சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு முன்னால் பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். விளையாட்டில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தியதாக கூறிய நக்வி, இந்திய அணியின் அணுகுமுறை தொடர்ந்தால் அதே நிலைப்பாட்டை பாகிஸ்தான் தொடரும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
English Summary
Pakistan will retaliate equally to India over refusal to shake hands Leader Naqvi interview