பி.டி.உஷாவின் 41ஆண்டு கால சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை..!
No one has broken PT Usha 41 year record yet
கேரள மாநில தடகள போட்டியில் பி.டி.உஷா தனது 20 வயதில், படைத்த சாதனை, கடந்த 41 ஆண்டுகளுக்கு பின்பும் இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது.
தற்போது பி.டி உஷா, (61) இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ளார். தடகள வீராங்கனையான இவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியா சார்பில் ஆசியப்போட்டிகளில் தங்கம் வென்று,ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.
கடந்த 41 ஆண்டுக்கு முன், அதாவது, 1984-ஆம் ஆண்டில், பி.டி.உஷா, அவரது, 20 வயதில் கேரளாவில் மாநில அளவில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தங்களில்சாதனை படைத்தார். 100 மீட்டரை 11.40 வினாடிகளிலும், 400 மீட்டரை 52.70 வினாடிகளும் கடந்து சாதனை படைத்து இருந்து இருந்தார்.

இந்த சாதனையை முந்தி செல்ல கொல்லத்தைச் சேர்ந்த 20 வயதான ஆர்த்ரா முயற்சி செய்தும் அவரால் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. இதில், 20 வயதான ஆர்த்ரா, 100 மீட்டரை 11.87 வினாடிகளில் கடந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டரை 11.84 வினாடிகளில் கடந்த ஓட்டப்பந்தய வீரரான ஷில்பி, இந்த முறை, 12.10 வினாடிகளில் கடந்தார். இடுக்கியின் ஆர்த்தி 12.09 வினாடிகளில் கடந்து, 03-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அத்துடன், 400 மீட்டர் ஓட்டத்தில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கவுரி நந்தனா 54.57 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனாலும், 41 ஆண்டுக்கு முன், அதாவது 20 வயதில், பி.டி. உஷா நிர்ணயித்த இலக்கை, திருவனந்தபுரத்தில் நடந்த 69-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் யாரும் முறியடிக்கவில்லை என்று கேரள விளையாட்டுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
No one has broken PT Usha 41 year record yet