இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. லாதம், வில்லியம்சன் அபார் ஆட்டம்.. நியூசிலாந்து வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இன்று காலை 7 மணிக்கு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணியை கொண்டு களமிறங்குகிறது. இந்திய அணியில் உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் விளையாடினார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும் எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்த அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 94 ரன்களுடனும், டாம் லாதம் 145 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டுமிடாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newzealand beat India by 7 wickets


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal