தமிழக வீரர் அடித்த சிக்ஸரை ரசித்து பார்த்த எம்எஸ் தோனி.. அடிக்கப்போகும் ஜாக்பாட்.!! - Seithipunal
Seithipunal


சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதியது. டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்தது. கர்நாடக அணியில் அதிகபட்சமாக மனோகர் 46 ரன்களை எடுத்தார். தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணியில், ஜெகதீசன் 42 ரன்னும், ஹரி நிஷாந்த 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக்கான், தமிழகக் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷாருக்கான் சிக்ஸர் அடித்து தமிழக அணியை வெற்றி பெறச் செய்தார். 

இந்நிலையில், கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்ததை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரசித்துப் பார்த்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலமுறை சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைக்கும் உலகின் தலை சிறந்த ஃபினிஷர் என்ற பெயர் பெற்ற தோனி, ஷாருக்கான் அடித்த சிக்ஸரை ரசித்து காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.  ஷாருக்கான் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni watches shahrukh khan final ball


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal