சென்னை அணியை பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேற்றிய மும்பை அணி.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐபிஎல் தொடரில் 59வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியின் தொடக்க வீரர் டேவான் கான்வே டக் அவுட் ஆகி ஆட்டமிழந்தனர். 

அதன் பிறகு மொயின் அலி டக் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா ஒரு ரன்னுக்கும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் ஆட்டமிழந்தனர். கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சென்னை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தோனி 36 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இசான் கிஷன் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தார். டேனியல் சாம்ஸ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 34 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். டிம் டேவிட் 16 எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். 

மும்பை அணி 16.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MI vs CSK Match MI Win


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->