மெஸ்ஸி வருகிறார்… ஆனால் அவர் அருகில் ஒரு கிளிக் எடுக்க ‘லட்சங்கள்’ தேவை...!
Messi coming but it costs lakhs take picture him
அர்ஜென்டினாவின் கால்பந்து மாயாஜால கலைஞர் லியோனல் மெஸ்ஸி, 3 நாள் சிறப்பு இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். வரும் 13-ம் தேதி மெஸ்ஸி ஐதராபாத் தரையிறங்கவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அவருடன் நேரடியாக புகைப்படம் எடுக்கும் அபூர்வ வாய்ப்பு தரப்படுள்ளது.
ஆனால் ஒரு கிளிக்குக்கே கட்டணம்… ரூ.10 லட்சம்!.இதுகுறித்து ஏற்பாட்டுக் குழு ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறியதாவது,“மெஸ்ஸி 13-ம் தேதி மாலை ஐதராபாத் வருகிறார். வரலாற்று சிறப்பு மிக்க ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் எக்ஸ்க்ளூசிவ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார்.

அங்கு அவருடன் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்கும் அனுமதி வழங்கப்படும். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் பிளஸ் ஜிஎஸ்டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை 100 பேருக்கு மட்டுமே வழங்க முடியும்,” என்றார்.
மேலும், மெஸ்ஸி உப்பல் மைதானத்தில் நடைபெறும் 3 மணி நேர சிறப்பு நிகழ்ச்சியிலும், சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வார். பின்னர் நடைபெறும் அணிவகுப்பில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை சிறப்பாக வரவேற்க உள்ளார்.
இந்த பிரமாண்ட நிகழ்வுக்கான அனைத்து வகை பாஸ்களும் மாவட்ட செயலி மூலம் கிடைக்கும் என்றும், இந்த நிகழ்ச்சிக்கு எந்த கிரிக்கெட் வீரர்களும் அழைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
Messi coming but it costs lakhs take picture him