இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் மாற்றம் - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை மாஸ்டர் கார்டு மற்றும் பிசிசிஐ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும். இதற்காக பிசிசிக்கு மாஸ்டர் கார்டு எவ்வளவு தொகையை செலுத்தும் என்பது வெளியிடப்படவில்லை.


 
ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் பிசிசிஐ சார்பில் நடைபெறும் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு மாஸ்டர் கார்ட் டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் உள்நாட்டு போட்டிகளுக்கு மட்டுமே. 

பெண்கள் அணி மற்றும் ஆண்கள் தேசிய ஆணி போட்டிக்கு மாஸ்டர் கார்டு நிதியுதவி செய்யும். உள்நாட்டு சர்வதேச போட்டிகள் மட்டுமில்லாமல் தேசிய அளவில் இராணி டிராபி, துலிப்ராபி மற்றும் ரஞ்சிடிராபி போன்றவற்றையும் மாஸ்டர் கார்ட் ஸ்பான்சர் செய்யும். இது தவிர உள்நாட்டு ஜூனியர் அணி போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்ட்ஸ் ஸ்பான்சர் ஆக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Master card new sponsor of Indian cricket team


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->