சூர்யவன்ஷி அருகில் சென்று ஆவேசமாக கத்திய கைல் ஜேமிசன்! வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய கைல் ஜேமிசனுக்கு பிசிசிஐ எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சீண்டியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு ஒரு டிமெரிட் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை, போட்டியின் இரண்டாவது ஓவரில் கைல் ஜேமிசன் அவுட்டாக்கினார்.

விக்கெட் எடுத்த பிறகு, பேட்ஸ்மேனின் அருகில் சென்று ஆவேசமாக நடந்துகொண்டதாகவும், அதன்மூலம் அவரை மனரீதியாக அழுத்தம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ஐ மீறுவதாக நடுவர் குழு கருதியுள்ளது.

போட்டி நடுவர் ராஜீவ் சேத் விதித்த தண்டனையை கைல் ஜேமிசன் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டுள்ளார். சர்வதேச அளவில் விளையாடும் ஒரு அனுபவமிக்க வீரர், இளம் வீரரிடம் இப்படிப்பட்ட அணுகுமுறையைக் காட்டியிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

போட்டியைப் பொறுத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ரியான் பராக் 50 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். டோனோவன் ஃபெரெய்ரா கடைசி நேரத்தில் அதிரடியாக 14 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார்.

226 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கே.எல். ராகுல் மற்றும் பதும் நிசாங்கா சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ராகுல் 75 ரன்களும், நிசாங்கா 62 ரன்களும் எடுத்தனர். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷுதோஷ் ஷர்மா அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனில் தனது நான்காவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முன்னணி இடங்களில் நீடித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kyle Jamieson went near Suryavanshi and shouted angrily BCCI warns Kyle Jamieson for scolding Vaibhav Suryavanshi


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->