அடி தூள்! நார்வே சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்செனை வீழ்த்திய குகேஷ்! - வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்
Kukesh defeats Carlsen in Norway international chess tournament Chief Minister congratulates
நார்வே நாட்டின் கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள பிரபல ஸ்டாவஞ்சர் நகரில் உற்சாகத்தோடு நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான ''குகேஷ்'' , 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் கலந்துக் கொண்டனர்.

இதன் கடைசி 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை 'குகேஷ்' இறுதிவரை போராடி வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்திலுள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குகேஷ்-க்கு தமிழக 'முதலமைச்சர் முக ஸ்டாலின்' மனமார வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின்:
அதில் அவர் குறிப்பிட்டதாவது," மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
Kukesh defeats Carlsen in Norway international chess tournament Chief Minister congratulates