மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் கே.எல்.ராகுல்.! ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஐபிஎல் லும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திடீரென்று கே.எல்.ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு உண்டாகியுள்ளது. 

அகமதாபாத்தில் அவருக்கு நேற்று திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அப்பன்டிசைடிஸ் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ள செய்தி குறிப்பில் நேற்று இரவு ராகுல் வயிற்று வலியில் துடித்தார். மருந்துகள் கொடுத்தும் சரியாகவில்லை என்று அவசர அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு குடல்வால் அழற்சி இருப்பது தெரியவந்தது. 
 
அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல. இனிவரும் தொடர்களில் ராகுல்காந்தி போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் அறுவை சிகிச்சை முடிந்த உடனே எல்லாம் விளையாட முடியாது இந்த சீசன் ராகுலுக்கு முடிந்துவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kl rahul in hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal