04-வது டெஸ்ட் கிரிக்கெட்: சுனில் கவாஸ்கர் சாதனையை சமன் செய்துள்ள கே.எல்.ராகுல்..!
KL Rahul equals Sunil Gavaskar's record in Test cricket
இங்கிலாந்துக்கு எதிரான 04-வது டெஸ்ட் கிரிக்கெட்டின் 04-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி இடைவேளை வரை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த 04 வது டெஸ்டில் இந்திய அணியில் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சனும், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, அன்சுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்ட்டுள்ளனர்.
-m2rhj.png)
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு, கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கே.எல்.ராகுல் 46 ரன்களில் அரை சத்தம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வோக்ஸின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 58 ரன்களில் அரை சதம் அடித்து ஆட்டமிழந்துள்ளார். சாய் சுதர்சன் 13 ரன்களும், கேப்டன் கில் 01 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியிலும் ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, வெளிநாட்டு மண்ணில் ,ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த 02-வது தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-dxsju.png)
இதற்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர்,
வெஸ்ட் இண்டீஸ் (1,404),
இங்கிலாந்து (1,152),
பாகிஸ்தான் (1,001)
ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது, அவரது ஒரு சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த 05-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
01- டெண்டுல்கர் (1,575),
02- டிராவிட் (1,376),
03- கவாஸ்கர் (1,152),
04- கோலி (1,096)
ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
English Summary
KL Rahul equals Sunil Gavaskar's record in Test cricket