ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கே எல் ராகுல்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் கேப்டன் கேஎல் ராகுல் 68 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தார். 

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷன் கிஷன் 8 ரன்னிலும், ப்ரெவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக ஆடி 39 ரன்களை எடுத்து வெளியேறினார். 

இதையடுத்து, திலக் வர்மா, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. திலக் வர்மா 38 ரன்னில் வெளியேறினார். பொல்லார்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மும்பை அணி தொடர்ந்து எட்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை கேஎல் ராகுல் நேற்று சமன் செய்தார். இருவரும் தலா ஆறு சதங்களை அடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KL Rahul Equals Rohit Sharma Record


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->