இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் எப்போது?
KL Rahul and Athiya Shetty marriage on January 23
இந்திய வீரர் கே.எல்.ராகுல் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான அதியாவை காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் திருமணம் இந்த மாதத்தில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ஹீரோ, மோட்டிச்சூர் சக்னசூர் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை அதியா ஷெட்டியை தான் இருவீட்டார் சம்மதத்தோடு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமணம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் வரும் ஜனவரி 23ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் குறித்து சுனில் ஷெட்டி அறிவிப்பார் என கூறப்படுகிறது.
English Summary
KL Rahul and Athiya Shetty marriage on January 23