பெயரை மாற்றினால் கோப்பை கிடைக்குமா?! பெயரை மாற்ற தயாரான ஐபிஎல் அணி!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு முறை வீரர்களை மாற்றியும், பயிற்சியாளர்களை மாற்றியும், சீருடையை மாற்றியும், ஏன் டுவிட்டர் ஹேண்டிலை கூட மாற்றியும் கோப்பை என்பது கெட்ட கனவாகவே இருந்து வரும் ஐபிஎல் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இந்த நிலையில் இந்த வருடம் புதிய பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பெங்களூர் அணியை போலவே துரதிர்ஷ்டமான அணியாகவே இருந்து வருகிறது. இதுவரை அந்த அணியும் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே ஒரே பெயரை இதுவரை வைத்திருக்கும் நிலையில், அந்த பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

இதற்கு முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ் என இருந்த டெல்லி அணியை டெல்லி கேப்பிடல் எனவும் டெக்கான் சார்ஜர்ஸ் என இருந்த டெக்கான் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எனவும் பெயர் மாற்றம் செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? என்ற காமெடியைப் போல பெயரை மாற்றினால் கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kings XI Panjab Team Name May be Changed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal