சதத்தை தவற விட்டாலும் சச்சினை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த 'கிங்' கோலி..! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ஈட்டியுள்ளது.

இந்த போட்டியில், 40வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போட்டியின் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன், விராட் கோலி தனது 624-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தொடர்ந்து சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்கள் குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

King Kohli surpasses Sachin and creates a new record


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->