ஜூனியர் ஆசிய கோப்பை: இரட்டை சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி! - Seithipunal
Seithipunal


19 வயதுக்குட்பட்டோருக்கான 12வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) துபாயில் தொடங்கியது. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் போட்டியிடுகின்றன. லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா பேட்டிங்:
எட்டு முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் இன்று யுஏஇ அணியுடன் மோதுகிறது. டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். ஆயுஷ் மாத்ரே 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு ஜோடி சேர்ந்த சூர்யவன்ஷி மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர்.

சூர்யவன்ஷி அதிரடி சதம்:
குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடிச் சதம் விளாசினார். அவர் இரட்டைச் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 171 ரன்களில் ஆட்டமிழந்தார். 9 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்சர்கள் உட்பட அதிரடியான இன்னிங்ஸை அவர் முடித்துக் கொண்டார். இதன்மூலம் 29 ரன்களில் தனது முதல் இரட்டைச் சதத்தை அவர் தவறவிட்டார். மறுமுனையில் ஆரோன் ஜார்ஜ் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Junior Asia Cup Vaibhav Suryavanshi 100


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->