சென்னை அணியின் தோல்விக்கு இது தான் காரணம்.. கேப்டன் ஜடேஜா வருத்தம்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனில் 7வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.


 
சென்னை அணியின் துவக்க வீரர் ராபின் உத்தப்பா அதிகபட்சமாக 50 ரன்களை அடித்தார். ஷிவம் துபே 49 ரன்களும், மொயின் அலி 35 ரன்களும் எடுத்தார். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி, 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

லக்னோ அணியின் துவக்க வீரர் குயின்டன் டி காக் 61 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல் 40 ரன்கள் எடுத்தார். எவின் லூயிஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தார். 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். இதையடுத்து லக்னோ அணி 19.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு நல்ல துவக்கம் இருந்தது. ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சிவம் துபே போன்றவர்கள் அருமையாக விளையாடினர். ஆனால் நாங்கள் கேட்ச்களை தவறவிட்ட தான் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது. மேலும், பனி காரணமாக பந்து வீரர்களின் கையில் சிக்கவில்லை. இனி ஈரபந்துகளிலும் நாங்கள் பயிற்சி செய்வது அவசியம். நாங்கள் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல நினைத்தோம். பிராவோ மிக சிறப்பாக பந்து வீசினார். நல்ல திட்டங்களை வைத்திருந்தாலும், அதை செயல்படுத்துவதில் நாங்கள் தவறுகள் செய்துவிட்டோம். அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் மீண்டும் வருவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jadeja says about lose the match


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->