“இந்தியாஇந்த கோப்பையுடன் உலகக் கோப்பையைத் தொட்டது நல்ல உணர்வு!” – பாகிஸ்தான் அமைச்சருக்கு மறைமுக பதிலடி கொடுத்த சூரியகுமார் யாதவ்
It feels good that India has touched the World Cup with this trophy Suryakumar Yadav gives an indirect reply to the Pakistani minister
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2–1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற டி20 தொடரில் அதே ஆஸ்திரேலியாவை 2–1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுத்துள்ளது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் கோப்பையை ஏற்றுக்கொண்டு அணியுடன் வெற்றியை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அவர், உற்சாகமான முகத்தோடு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர்,“இந்த முறை கோப்பையை ஒருவழியாக தொட்டுவிட்டீர்களா?”என்று கிண்டலாக கேட்டார்.இந்த கேள்விக்கு பின்னணி உண்டு. கடந்த மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில், பாகிஸ்தானை தோற்கடித்து 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. அத்தொடரின் முடிவில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும், ஆசிய கவுன்சில் தலைவராகவும் உள்ள மோசின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை பெற மறுத்தது.
அதனால் கோபமடைந்த மோசின் நக்வி, கோப்பையை தானே எடுத்துச் சென்றார். ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு அசராமல், “கோப்பை எங்கள் கையில் இருப்பது போலவே” கொண்டாடி, பாகிஸ்தான் தரப்புக்கு மறைமுக பதிலடி கொடுத்தனர். ஒரு மாதம் கழிந்தும், அந்த ஆசியக் கோப்பை இதுவரை இந்திய அணிக்குக் கொடுக்கப்படவில்லை.
இதையே நையாண்டியாக நினைவூட்டும் வகையில் செய்தியாளர் சூரியகுமாரிடம் கேட்ட கேள்விக்கு, அவர் புன்னகையுடன் பதிலளித்தார்.“இந்த கோப்பையைத் தொட்டது ஒரு அருமையான உணர்வு. வெற்றிக்காக அது எங்களிடம் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் மற்றொரு கோப்பையும் இந்தியாவுக்கு வந்தது – அது எங்கள் மகளிர் அணியின் உலகக் கோப்பை. அந்தக் கோப்பையும் வீட்டுக்கு வந்தது ஒரு பெருமை உணர்வை அளிக்கிறது,”என்று கூறினார்.
அதன்பின் அவர் மேலும் குறிப்பிட்டார்,“இந்தக் கோப்பையையும் தொட்டது நல்ல உணர்வைக் கொடுக்கிறது.”சூரியகுமார் யாதவின் இந்த வார்த்தைகள், பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி எடுத்துச் சென்ற ஆசியக் கோப்பை விவகாரத்துக்கான மறைமுக பதிலடியாக பார்க்கப்படுகின்றன.
அதாவது, ஆசியக் கோப்பையை தற்காலிகமாக யாரும் எடுத்துச் செல்லலாம், ஆனால் அதைவிட உயர்வான உலகக் கோப்பை இப்போது இந்தியாவின் வீட்டில்தான் இருக்கிறது என்பதைக் கேப்டன் சூரியகுமார் நையாண்டியாக நினைவூட்டியுள்ளார்.இந்த பதிலுடன் சூரியகுமார் யாதவ் ரசிகர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
English Summary
It feels good that India has touched the World Cup with this trophy Suryakumar Yadav gives an indirect reply to the Pakistani minister