ஐசிசி ஆடவருக்கான டி20 தரவரிசை : 08 வது இடம் பிடித்த இஷான் கிஷன்; முதல் இடத்தில் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர்..!
Ishan Kishan moves to 8th place in ICC Men's T20I Rankings
10 வது டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடந்த நமீபியா-பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வெற்றிபெற்று 08 போட்டிக்கு 'குரூப் ஏ' பிரிவில் இரண்டாவதாக தேர்வாகியுள்ளது.
இந்த ஏ குரூப்-இல் இடம் பெற்ற இந்திய அணி, 03 போட்டிகளில் விளையாடி 03 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த 03 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 02 போட்டியில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போது நடைபெறும் நெதர்லாந்து எதிரான போட்டியிலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஐசிசி ஆடவருக்கான டி20 தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இஷான் கிஷன் 17 இடங்கள் முன்னேறி 08-வது இடத்தை பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் ரிக்கல்டன் 22 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர் பதும் நிசங்க 03 இடங்கள் முன்னேறி 03-வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 01 இடம் முன்னேறி 04-வது இடத்தை பிடித்துள்ளார்.
அடுத்ததாக, டி20 பந்து வீச்சு தரவரிசையை பட்டியலில் ஜிம்பாப்வே அணி வீரர் பிராட் எவன்ஸ் 10 இடங்கள் முன்னேறி 05-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் பும்ரா 06 இடங்கள் முன்னேறி 15-வது இடமும், அக்சர் படேல் 04 இடங்கள் முன்னேறி 14-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இதை தவிர பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஆல் ரவுண்டர்களில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஷிவம் துபே 03 இடங்கள் முன்னேறி 09-வது இடத்தை பிடித்துள்ளார்.
English Summary
Ishan Kishan moves to 8th place in ICC Men's T20I Rankings