கிரிக்கெட் உலகமே ஆடிப்போகும் அளவிற்கு ருத்ரதாண்டவம் ஆடிய இஷான் கிஷன்! 28 ஓவர்களுக்குள் 173 ரன்கள்!  - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இன்று முதல் மாநில அணிகளுக்கிடையேயான விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரானது தொடங்கியது. பல்வேறு நகரங்களில் இந்தியா முழுவதும் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தூரில் நடைபெற்ற போட்டியில் மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதின. 

இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால் சில நிமிடங்களில் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜார்க்கண்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக அந்த அணியின் கேப்டன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், உட்கார்ஷ் சிங் களமிறங்கினர். ஈஸ்வர் பாண்டே பந்துவீச்சில் உட்கார்ஷ் சிங் 6 ரன்களில் வெளியேற, இஷான் கிஷனுடன் குமார் குஸ்கார களமிறங்கினார். 

குமார் குஸ்கார மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நின்றிருந்த இஷன் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். 11 சிக்ஸர்களையும் 19 பவுண்டரிகளையும் விளாசி தள்ளிய அவர் 94 பந்துகளில் 173 ரன்களை குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28ஆவது ஓவரிலேயே ஆட்டம் இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் 50 ஓவர்கள் நின்றிருந்தால், 300 ரன்களைக் கடந்து எடுத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து மந்தமாக விளையாடிக்கொண்டிருந்த குஷ்கர 45 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் சிங் 49 பந்துகளில் 68 ரன்களும் ஸ்மித் குமார் 58 பந்துகளில் 52 ரன்களும் அங்குள் ராய் 39 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிகசர்களுடன் 72 ரன்களை குவிக்க, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் என்ற இமாலய ரன்னை குவித்துள்ளது ஜார்கண்ட். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

iShan kishan fired batting against Madhya Pradesh in Indore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->