ஐபிஎல்லில் தோனி ஒய்வு?! தோனி பரபரப்பு அறிவிப்பு! கவலை தேய்ந்த ரசிகர்கள்... !  - Seithipunal
Seithipunal


இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

முதலாவதாக நடைபெறும் போட்டியில் வெற்றியை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கிறது. 

இந்த போட்டி தொடரில் இதுவரை 52 போட்டிகள் முடிந்த நிலையில் ஒரே ஒரு அணி மட்டுமே  அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. ஒரே ஒரு அணி மட்டுமே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.  மீதமுள்ள 6 அணிகள் அடுத்த மூன்று இடங்களுக்கான இடத்திற்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதில் இன்று நடைபெறும் போட்டியில் இரண்டுமே முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. முன்னதாக நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதுடன் சிறந்த ரன்ரேட் பெறுமானால் அந்த அணி உறுதியாக அடுத்த சுற்றுக்கு சென்றுவிடும். அதேசமயம் தோல்வியடைந்தால் இந்த தொடரில் இருந்து வெளியேற நேரிடும். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸ் வென்ற தோனியிடம் சென்னைக்காக இது உங்கள் கடைசி போட்டியா என கேட்டதற்கு, "நிச்சயமாக இல்லை" என பதிலளித்துள்ளார். விடைபெறுவாரோ என கவலையுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த பதில் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is dhoni retired in IPL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal