இந்த வருட ஐபிஎல் நிகழ்ச்சி ரத்து! ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஆனால் அதனை தாண்டிய நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கிரிக்கெட் வாரியம்!  - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,  அவந்திபோரா பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 42 துணை பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்ததையடுத்து, இந்தியாவின் சார்பில் எவ்வித விளையாட்டிலும் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என  கோரிக்கை வலுத்து வருகிறது. 

ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தானுடன் இருநாட்டு தொடர்களில் விளையாடவில்லை. மேலும் இது நாட்டுக்கு இடையேயான தனிப்பட்ட தொடர்களும் இல்லாத நிலையில், சர்வதேச தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறது. அதேபோல ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை போட்டியில் மட்டும் விளையாடுகிறது. 

இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலககோப்பை போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என இந்தியர்கள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.  இந்நிலையில் இது குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை என்று கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அதிகாரி வினோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் முடிவெடுத்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தொடக்க விழாவினை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தொடக்க விழாவுக்கான செலவினை அப்படியே தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு  நிதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார். இந்த முடிவானது கிரிக்கெட் வாரியமும் இப்படியெல்லாம் செய்யுமா என்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

English Summary

ipl opening ceremony called off said bcci vinod rai


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal