ஐபிஎல் மினி ஏலம்.. கேப்டன் கேன் வில்லியம்சனை கழட்டிவிட்ட ஹைதராபாத் அணி.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்திற்காக தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்று (நவம்பர் 15ஆம் தேதி) அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் ஐபிஎல் 2023 சீசனுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்த மற்றும் விடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் ;

அப்துல் சமத், ஐடன் மார்க்ராம், ராகுல் திரிபாதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்

ஹைதராபாத் விடுவிக்கப்பட்ட வீரர்கள் ;

கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சௌரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction sunrises Hyderabad released players list


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->