சிஎஸ்கே-வின் மோசமான சாதனை! மும்பை, பெங்களூருக்கு நல்ல வாய்ப்பு!
IPL 2025 Chennai super kings Gujarat Titans
ஐபிஎல் 2024 தொடரின் 67வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி அபாரமாக ஆடி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது.
டெவான் கான்வே (52) மற்றும் ஆயுஷ் மாத்ரே (34) தொடக்கத்தில் அதிரடியாக ஆடியனர். உர்வில் படேல் 37 ரன்கள், ஷிவம் துபே 17 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களம் கண்ட டெவால்ட் பிரேவிஸ் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் மழையென பறக்கவிட்டு, 23 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். ஜடேஜா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடுமையான இலக்கை எதிர்கொண்ட குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாய் சுதர்ஷன் மட்டும் 41 ரன்கள் எடுத்ததுடன், மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாட முடியவில்லை.
CSK பந்து வீச்சில் அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்கள் மற்றும் கலீல் அகமது, பதிரணா தலா ஒரு விக்கெட்கள் எடுத்தனர்.
அரை சதமுடன் ரன் மழை பொழிந்த டெவால்ட் பிரேவிஸ் 'மேன் ஆப் தி மேட்ச்' விருதை பெற்றார்.
சென்னை அணி 14 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 10 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் கடைசி இடத்தில் சென்னை அணி நிறைவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணி 14 ஆட்டங்களில் பங்கேற்று 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும் சென்னை அணியின் வெற்றியால் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் புள்ளி பட்டியலில் முதலிடம் செல்ல வாய்ப்பும் கிடைத்துள்ளது.
English Summary
IPL 2025 Chennai super kings Gujarat Titans