தம்பி, தம்பி... தப்பா சொல்லாதீங்க! மரண அப்டேட் கொடுத்த தோனி! - Seithipunal
Seithipunal


பல்வேறு நாட்டு வீரர்கள் பங்குபெறும் இந்தியாவின் ஐபிஎல் தொடருக்கு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

வரும் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

2020 ஆம் ஆண்டுக்கு பின், எப்போதும் போல ரசிகர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி இப்போதும் எழுந்துள்ளது.

ஆம், இந்த 2024 ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? என்பதுதான் அந்த கேள்வி. 

ரசிகர்களின் இந்த கேள்விக்கு.... இல்லை இல்லை சந்தேகத்திற்கு, பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம் இருந்து சிறப்பான ஒரு பதில் கிடைத்துள்ளது. 

பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிஎஸ்கே கேப்டன் தோனியை, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார். 

இதனை கேட்டு அதிர்ந்த தோனிக்கு அருகில் இருந்த நபர் உடனடியாக எழுந்து... "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார்" என்று கூறி தவறை திருத்தினார். அப்போது தோனி, ஆம் என்று கூற, சிஎஸ்கே ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

மேலும், தோனி தனது காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து தெரிவிக்கையில், "அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் குணமடையவில்லை. நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைவேன் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தோனி தெரிவித்தார்.

எது எப்படியோ, தோனி அடுத்த மாதம் குணமடைவதும் உறுதி, 2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என்பது உறுதியாகிவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK MSDhoni


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->