#IPL2022 : அனல் பறக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்..இன்று 2 முக்கியமான போட்டிகள்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி-மும்பை., பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்த முறை மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, சில புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதிச்சுற்றுக்கு நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. குரூப் பி-யில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 

அதில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை நேருக்கு நேர்

மும்பை, டெல்லி அணிகள் இதுவரை நேருக்கு நேர் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 16 போட்டிகளில் மும்பை அணியும், 14 போட்டிகளில் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டு பிளேசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இதுவரை நேருக்கு நேர்

பஞ்சாப், பெங்களூரு அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 15 போட்டிகளிலும் பெங்களூர் 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2022 today played double match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->