#IPL2022 : முதலிடத்தைப் பிடிக்கப் போவது யார்.? லக்னோ-குஜராத் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 57-வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 57-வது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

அதேபோல், 11 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2022 match 57 LSG vs GT


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->