#BigBreaking | சென்னை அணியின் பந்து வீச்சை சிதற விடும் வெங்கடேஷ் ஐயர், கில்.! தற்போதைய நிலவரம்.!  - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் தொடரில் இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா மரண அடி அடித்தார். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க. அடுத்து களமிறங்கிய மொயின் அலி தனக்கே உண்டான பாணியில் சிக்ஸர்களை பறக்க விட்டார். 

தொடக்க ஆட்டக்காரர் பாப் டுப்ளஸ்ஸி மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த, அது சென்னை அணிக்கு மிக பெரிய பலமாக அமைந்தது. டுப்ளஸ்ஸி 59 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) 86 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கி அதிரடியாக ஆடி வருகிறது. 

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க சுபமான் கில், வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பான ஒரு தொடக்கத்தை கொல்கத்தா அணிக்கு கொடுத்தது. இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இதில் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 50 ரன்கள் (இதில் 5 பவுண்டரி, 3 சிக்சரும் அடங்கும்) எடுத்து ஆட்டழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ராணா டக் அவுட் ஆகி வெளியேற சென்னை அணி ரசிகர்களுக்கு பரவசம் பற்றிக்கொண்டது. 

தற்போதைய ஆட்டத்தை நிலவரப்படி 2 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 11.2 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்துள்ளது

கோப்பையை வெல்வதற்கு கொல்கத்தா அணி 52 பந்துகளில் 96 ரன்களை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், தங்களின் பந்துவீச்சால் கொல்கத்தா அணியை ரன் எடுக்க விடாமலும், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 FINAL KKR MASS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->