#BigBreaking | மரண அடி அடித்த சென்னை அணி.! கொல்கத்தாவுக்கு இமாலய இலக்கு.! - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் தொடரில் இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி தொடக்கி நடந்து கொண்டு இருக்கிறது.  இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆடி வருகின்றன.

கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, சென்னை அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது.

சென்னை அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் அசத்தாலன ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா மரண அடி அடித்தார். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழக்க. அடுத்து களமிறங்கிய மொயின் அலி தனக்கே உண்டான பாணியில் சிக்ஸர்களை பறக்க விட்டார். 

தொடக்க ஆட்டக்காரர் பாப் டுப்ளஸ்ஸி மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த, அது சென்னை அணிக்கு மிக பெரிய பலமாக அமைந்தது. டுப்ளஸ்ஸி 59 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) 86 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 20 பந்துகளில் 37 ரன்கள் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் கோப்பையை வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2021 final csk


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->