தோனியை வீழ்த்திய கம்பீர்.! 2012 க்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி?!  - Seithipunal
Seithipunal


14வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று கோப்பைக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்க உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ஐபிஎல் 12 தொடர்களில் விளையாடி உள்ளது. இதில், ஒன்பது முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதில், கடந்த 2010ஆம் ஆண்டு, 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

அதே சமயத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இறுதி சுற்றுக்கு முன்னேறி, அந்த இரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வெல்லும் போது, அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர் ஆவார்.

குறிப்பிடும்படியாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில், கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பலப்பரிட்சை நடைபெற்றது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த நிலையில் இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையில் கோப்பைக்கான மீண்டுமொரு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது கோப்பையை 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2021 final


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->