ராயலா.? ராயல்ஸா.? பரபரப்பான ஆட்டத்தில் விராட் கோலியின் வெறியாட்டம்! - Seithipunal
Seithipunal


13வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் இன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராபின் உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்களை எடுத்து, சாகல் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் 19 பந்துகளில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 6 பந்துகளில், ஒரு சிக்சரை மட்டும் அடித்து விட்டு, 9 ரன்களுக்கு ஆட்டம் இருந்தார். அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 36 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் படிக்கல் நிதானமாக தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடி வருகிறார். அதிரடி மன்னன் ஆரோன் பின்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

விராட் கோலி களமிறங்கியது முதலே தனது அதிரடி ஆட்டத்தை ஆடிய அவர் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 match 33 rcb vs rr 2nd half


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->