இன்றும் டக் அவுட் ஆன ஷா! போராடும் சிஎஸ்கே., வெற்றியை நோக்கி டெல்லி கேபிட்டல்ஸ்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் சீசன் தொடரின் இன்றைய 34 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப் கிங்க்ஸ் அணி  முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. 

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குட்டி சிங்கம் சாம் குரான் 3 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாப் டு பிளசிஸ் 58 ரன்கள் எடுத்த போது ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஷேன் வாட்சன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு 25 பந்துகளில், 4 சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

மகேந்திர சிங் தோனி 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,

களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தார்.

அவர்அடித்த 33 ரன்களில் 4 சிக்சர்கள் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா இன்றும் டக் அவுட் ஆனார். 

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இறுதிவரை களத்தில் நின்று ஆடி செஞ்சுரி போட்டார்.

அஜிங்கிய ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடி ரன் குவிக்க முற்பட்டபோதே தான் சந்தித்த 23 வது பந்தில் 23 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். 

ஸ்டோனிக்ஸ் களமிறங்கியது முதல் தனது அதிரடி ஆட்டத்தை ஆடி 24 ரன்னில் அவுட் ஆக, டெல்லி அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது. 

டெல்லி கேப்பிடல் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 CSK VS DC


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal