கேப்டன் என்றால் மக்கள்...மக்கள் மனங்களில் நிலைத்த தலைவர் விஜயகாந்த் - த.வெ.க. தலைவர் விஜய்
Captain means people Vijayakanth leader who remains hearts people Vijay President tvk
திரையுலகில் அதிரடி நாயகனாகவும், அரசியலில் நேர்மையான தலைவராகவும் தனித்துவமான அடையாளம் பதித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த், கடந்த 2023 டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவு, திரைத்துறையையும் அரசியல் உலகையும் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே ஆழ்ந்த துயரில் ஆழ்த்திய பெரும் இழப்பாக அமைந்தது.

அவரது இறுதிச்சடங்கு, சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தே.மு.தி.க. தலைமையகத்தில், அரசு மரியாதையுடன் நடைபெற்றது; அந்த தருணம் தமிழக வரலாற்றில் மறக்க முடியாத காட்சியாக பதிந்தது.
இந்த நிலையில், இன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் அவரது நினைவிடத்தில் திரண்டு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடம் பெற்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில், புரட்சிக் கலைஞருக்கு என் ஆழ்ந்த வணக்கமும் புகழஞ்சலியும்” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Captain means people Vijayakanth leader who remains hearts people Vijay President tvk