லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வரலாறு படைப்பு; 270 ரன்களில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 270 ரன்களில் வீழ்த்தியது இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றிப்பெற்றுள்ளது.

கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி, கேப்டன் ஹர்மன்ப்ரீத், தீப்தி சர்மா ஆகியோர் அரை சதம் விளாசி நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 285 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 170 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய கிரந்தி கவுட் 05 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அடுத்து 115 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய மகளிர் அணி, 86.3 ஓவர்களில் 07 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஸ்மிருதி 70 மற்றும் ரிச்சா கோஷ் 50 ரன்கள் எடுத்தனர். பின்னர் 456 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஏமி ஜோன்ஸ் 54, சோபி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 62.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு இங்கிலாந்து மகளிர் அணி, ஆல் அவுட் ஆனது. இந்தியா 270 ரன்களில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை நான்காவது முறையாக இந்தியா வீழ்த்தி உள்ள நிலையில், இதில் மூன்று வெற்றி இங்கிலாந்து மண்ணில் பதிவாகியுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் ஸ்னே ராணா 04 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாயாலி, கிரந்தி, தீப்தி சர்மா தலா 02 விக்கெட்டுகள் கைப்பற்றினர். போட்டியில் 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருதை கிரந்தி கவுட் வென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian womens team creates history by defeating England in Lords Test match


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->