மகளிர் கிரிக்கெட், தொடரை இழந்தது இந்தியா.! - Seithipunal
Seithipunal


இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தெந்ர்வு செய்தது. இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய மேகனா மற்றும் ஷபாலி வர்மா இந்திய அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய மேகனா 41 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். ஷபாலி வர்மா தன் பங்கிற்கு 57 பந்துகளி 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய தீப்தி ஷர்மா 69 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது.

பின்னர் இரண்டாவதாக பேட்டிங் செய்த நியுசிலாந்து அணியில் முதல் ஓவரிலேயே கோஸ்வாமி விக்கட் விழ்த்தினாலும், அமெலியா கெர், சேட்டர்த்வைட் மற்றும் லாரன் டவுன் ஆகியோர் அரை சதம் அடித்தனர். நியூசிலாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கட்டுகளை இழந்து 280 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது. 22-ஆம் தேதி நான்காவது போட்டியும், 24 -ஆம் தேதி 5-வது ஒருநாள் போட்டியும் நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian women cricket team lost one day series


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->