ஜூனியர் உலக கோப்பை.. ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


ஜூனியர் 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களை எடுத்தது. 

யாஷ் தல் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஷேக் ரஷீத் 94 ரன்னில் அவுட் ஆனார். கடைசி ஓவரில் தினேஷ் பானா 4 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.

இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் லச்லான் ஷா மட்டும் ஓரளவு நிதானமாக ஆடி அரைசதம் அடித்து, 51 ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கோரெ மில்லர் 38 ரன்னு எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆடவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதன் மூலம் இந்திய அணி 96 வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team go to final


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->