#Breaking: விடா முயற்சி கட்டாயம் வெற்றியை தரும்.. சேலம் சின்னம்பட்டியில் நடராஜன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் சேலத்தில் உள்ள சின்னம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட் எடுத்து கனவுகள் போல இருந்தது. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்றே நான் எதிர்பார்க்கவில்லை.

என்னை அணியில் இருந்த பிற வீரர்கள் நல்ல முறையில் பார்த்துக்கொண்டார்கள். புதிதாக நண்பர்கள் சேர்ந்தது போல இல்லாமல், இயல்பாக பழகி என்னை ஊக்குவித்தார்கள். அவர்களின் ஊக்குவிப்பு காரணமாக நான் பல வெற்றியை செய்துள்ளேன். 

எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஆஸ்திரேலிய அணியின் வார்னர் இப்போதும் என்னுடன் நன்றாகத்தான் பழகினார். அவர் எப்போதும் போலத்தான் இருக்கிறார். அதே அன்போடும் பாசத்தோடும் இருக்கிறார். 

எனது கைகளில் கோப்பையை கொடுக்கையில் என்னால் அதனை வார்த்தைகளில் விவரிக்க இயலவே முடியவில்லை. எனது கண்கள் அனைத்தும் கலங்கிவிட்டது. விடாமுயற்சி மட்டும் தான் விஸ்வரூப வெற்றியை தரும். இரவு பகலாக நமது இலட்சியத்திற்காக உழைத்தால் நமது வெற்றி கிடைக்கும். உழைப்பால் உயர்ந்துள்ளேன் என்பதை எனது வாழ்க்கையில் பாடமாக நான் பார்த்துள்ளேன். 

சேலத்தில் மிகப்பெரிய மைதானமும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்திய அளவிலான போட்டிகள் சேலத்தில் நடைபெறும். என்னுடன் அணியில் இருந்தவர்கள் கொடுத்த ஊக்கத்தால், நான் வெற்றியடைந்துள்ளேன். ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய அனுபவம் எனக்கு மிகவும் உதவியது. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நான் இந்தியாவிற்காக விளையாடியது எனது குடும்பத்திற்கு மிகவும் பெருமையை அளித்துள்ளது. சிறுவயதில் இருந்து எனக்கு சச்சினை பிடிக்கும். சச்சினை சந்திப்போம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளேன். 

எனது நண்பர்கள், குடும்பத்தினர் எனக்கு மிகவும் ஒத்துழைத்தார்கள். பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறன். எனது ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். எனக்கு வாய்ப்பளித்த, எனக்கு ஆதவளித்த அனைவருக்கும் நன்றிகள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Cricketer Natarajan Pressmeet Salem 24 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->