#INDvNZ :: இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்..!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிக்கான சம்பளத்தில் 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து போட்டி நடுவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் ஐசிசி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் மூன்று ஓவர்களை குறிப்பிட்ட நேரத்தில் இந்திய அணி வீசவில்லை என தெரிய வந்ததால் போட்டி சம்பளத்திலிருந்து ஒரு ஓவருக்கு தலா 20 சதவீதம் விதம் 3 ஓவர்களுக்கு 60 சதவீத சம்பளத் தொகை அபராதம் விதித்து ஐசிசி போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா அபராத தொகை செலுத்துவதாக ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக நடுவர்களின் குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team fined for slow bowling


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->