பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு.! - Seithipunal
Seithipunal


பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர்பான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதனைத் தொடர்ந்து இந்திய அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நியூசிலாந்து தொடரில் விளையாடி வரும் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நியூசிலாந்து தொடரில் விளையாட ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் ஆகிய சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team announced against Bangladesh odi series


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->