வங்கதேசத்தை வச்சு செய்த இந்தியா அபரா வெற்றி! பவுலர்களை கதறவிட்ட ரோஹித் ஷர்மா!  - Seithipunal
Seithipunal


ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 154 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து பங்களாதேஷ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 29 ரன்களும், முகமது நைம் 36 ரன்களும் அடிக்க, வங்கதேசம் அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. 

அதன் பிறகு வந்த சவுமியா சர்க்கார், கேப்டன் மஹமதுல்லா தலா 30 ரன்கள் அடிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை வங்கதேசம் அணிகள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீபக் சாஹர், கலீல் அஹமது, வாஷிங்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும், சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. 

இந்திய அணிக்கு இந்த போட்டியில் எதிர்பாராத அதிரடி தொடக்கம் கிடைத்தது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணி 118 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. 31 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் இறங்கிவந்து கிளீன் போல்டாகி வெளியேறினார்.

ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட அதிரடியாக ரன்களை குவித்த ரோகித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர்க்கு ஆசைப்பட்டு சதம் அடிக்கும் வாய்ப்பினை இழந்தார். அதன் பிறகு வந்த லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் வெற்றிக்கான ரன்களை அடிக்க இந்திய அணி 16 ஓவர்களில் 154 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன் மூலம் இந்த தொடர் ஆனது 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டியானது பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won the rajkot match and level the series


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal