இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர்.. நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதில், ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடர கைப்பற்றியுள்ள நிலையில், இன்று 3-வது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவே, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 385 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 101 ரன்கள் எடுத்தார், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 72 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும், ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூரும், தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 90 runs against newzealand in 3rd oneday international


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->