ரோகித் சர்மா அதிரடி ஆட்டம்.. இந்தியா அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிதத்து.

இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2ஆவது டி20 போட்டி நாக்பூரில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மேதீவ் வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலில் அதிரடி காட்டியது. ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக ஆடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 20 பந்துகளில் (4 சிக்சர், 4 பௌண்டரிகளுடன்) 46 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இருக்காமல் இருந்தார். இதனையடுத்து 7.2 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும், இந்திய அணி ஒரு போட்டியிடம் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. மேலும் இந்த தொடரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 6 wickets in 2nd T20 against australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->