#INDvsNZ : கடைசிவரை போராடிய நியூசிலாந்து அணி.. இந்திய அணி த்ரில் வெற்றி.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், உறுதியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி 149 பந்துகளில் ( 19 பவுண்டரி & 9 சிக்ஸர்) 208 ரன்கள் அடித்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் ப்ரேஸ்வெல் - மிட்செல் சான்ட்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இறுதியாக நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் ப்ரேஸ்வெல் 78 பந்துகளில் (12 பவுண்டரி & 10 சிக்ஸர்) 140 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won by 12 runs against newzealand in 1st oneday international


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->