ஆசிய தடகள போட்டி: கலப்பு தொடர் ஓட்டத்தில்இந்தியா தங்கம்: மும்முறை தாண்டுதலில் தமிழக வீரர் வெள்ளி வென்று அசத்தல்..! - Seithipunal
Seithipunal


26-வது ஆசிய தடகளப்போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. 343 நாடுகளைச் சேர்ந்த 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 59 வீரர்கள் அங்கு சென்றுள்ளன. 

இந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசதியுள்ளது. இந்திய அணி வீரர்கள் ரூபால், சந்தோஷ்குமார் தமிழரசன், விஷால், சுபா வெங்கடேசன் ஆகியோர் இந்த் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பந்தய தூரத்தை 03.18 நிமிடங்களில் கடந்து தங்கத்தை வென்றுள்ளனர். இப்போட்டியில் சீனாவுக்கு  வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. பந்தய தூரத்தை சீன போட்டியாளர்கள் 03.20 நிமிடங்களில் கடந்தனர். அண்டைய நாடான இலங்கைக்கு வெண்கலம் பதக்கம் கிடைத்துள்ளது.

அத்துடன், தடகள போட்டியின் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மும்முறை தாண்டுதலில் அவர் 16.90 மீட்டர் தாண்டியுள்ளார். சீனாவின் ஜூஹூ யாமிங் 17.06மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நடப்பு சாம்பியனான அப்துல்லா அபுபக்கர் 16.72மீ தாண்டி 04-வது இடத்தையே பிடித்துள்ளதோடு,  கொரியாவின் ஜியுமிங் யு, 16.82 மீட்டர் தாண்டி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India wins gold in mixed relay at Asian Athletics Championships Tamil Nadu athlete wins silver in triple jump


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->