இந்தியா டாஸ் வெற்றி! நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!   - Seithipunal
Seithipunal


இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. 

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே ஆப்கானிஸ்தானுடன் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த நிலையில், தற்போது இந்தியாவுடன் இருபது ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ஹைதராபாத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் முதல்20 ஓவர் போட்டியானது தொடங்க உள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளார். பொல்லார்ட் தலைமையில் களமிறங்கியுள்ள வெஸ்டிண்டிஸ் அணி சாதிக்குமா என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 20 ஓவர் போட்டிகள் பொருத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பலம் வாய்ந்த அணி என்பதால் இந்த தொடரானது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புவனேஷ்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்திய அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், , ரிஷாப் பந்த், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்

வெஸ்ட்  இண்டீஸ் அணி : லென்ட்ல் சிம்மன்ஸ், எவின் லூயிஸ், பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மியர், கீரோன் பொல்லார்ட், டெனேஷ் ராம்டின், ஜேசன் ஹோல்டர்,  கெஸ்ரிக் வில்லியம்ஸ், கேரி பியர், ஹேடன் வால்ஷ் ஜூனியர், ஷெல்டன் கோட்ரெல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india vs west indies 1st T20 match


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->