04-வது டெஸ்ட் போட்டி: மான்செஸ்டரில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு படுமோசமாக சொதப்பும் இந்திய அணி: கில்லை சுத்துப்போட்ட இங்கிலாந்து அணி..! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கிடையிலான 04-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 669 ரன்களை குவித்துள்ளது. இதன்மூலம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 ரன்களுக்கு அதிகமான இந்திய அணி தனது மோசமான பந்துவீச்சில் வாரி வழங்கியுள்ளது. 

05 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 02-01 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. அணி சார்பாக சாய் சுதர்சன் (61), ஜெய்ஸ்வால் (58), பன்ட்(51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து, பேட் செய்த இங்கிலாந்து அணி, அபாரமான டெஸ்ட் போட்டி மாதிரி இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் போன்று போன்று ரன்களை வாரி குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக க்ராலி (84), டக்கெட் (94), போப் (71) ஆகியோர் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டனர். இதில் சிறப்பாக ஆடி சதம் அடித்த ஜோ ரூட் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றையநாள் 03-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 07 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்களை குவித்து இருந்தது.

இன்று, 04-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். இது அவரது 14-வது சதமாகும். இறுதியில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஜடேஜா 04 விக்கெட்டுகளும், பும்ரா, வாஷிங்டன் சுந்தர் தலா 02 விக்கெட்டுகளும், கம்போஜ், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 02-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கிடைத்தது. ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறியுள்ளனர்.

இந்த 04-வது போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான  பும்ராவின் பந்துவீச்சும் சுமாராகவே இருந்தது. இவர் 112 ரன்களை விட்டுக்கொடுத்து 02 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தற்போது வரை 48 டெஸ்ட்டில் (91 இன்னிங்ஸ்)விளையாடியுள்ள பும்ரா, முதல்முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கம்போஜ் ரன்களை வாரி வழங்கினார். அவருடன் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூரும் பந்துவீச்சில் மோசமாக சொதப்பினார். மேலும், சிராஜின் பந்துவீச்சும் சொல்லும்படி இல்லை.  ஆறுதலாக ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்து வீசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India suffers worst defeat in 11 years in Manchester in 4th Test


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->