இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான 2வது டி- 20 கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. கநேற்று முன்தினம் கவுகாத்தியில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் டி - 20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது டி - 20 போட்டி இன்று நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டு என்பதால், இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இந்தூரில் கடந்த சில தினங்களாகவே மாலையில் பனிப்பொழிவு அதிகமாக பெய்து வருகின்றது. இது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india srilanka second match


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal